/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மேற்கு வங்க குற்றவாளி பெருந்துறையில் கைது
/
மேற்கு வங்க குற்றவாளி பெருந்துறையில் கைது
ADDED : நவ 14, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மானஸ் மண்டல், 23; அங்கு குற்ற செயலில் ஈடுபட்ட நிலையில், பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மேற்கு வங்க போலீசார், பெருந்துறை போலீசார் உதவியுடன், மானஸ் மண்டலை புதன்கிழமை இரவு கைது செய்தனர். பின் பெருந்துறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேற்கு வங்காளத்துக்கு அழைத்து சென்றனர்.

