ADDED : ஏப் 10, 2026 03:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு டவுன் எல்லை பகுதியில், கடந்த ஜன.,12ல் பெரியார் நகர், ஈ.வி.என்.சாலையில் இயங்கி வரும், கர்நாடகா வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயன்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிரிட்டாம் சர்கி, 39, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல் வழக்கு நடந்தது. இதில் அவருக்கு மூன்று மாத சிறை, 1,000 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்ததாக, மாவட்ட போலீசார் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
