/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதியவர் கழுத்தை அறுத்த மேற்கு வங்க வாலிபர்ஈரோட்டில் அடித்து கொலை; ஜவுளி வியாபாரி கைது
/
முதியவர் கழுத்தை அறுத்த மேற்கு வங்க வாலிபர்ஈரோட்டில் அடித்து கொலை; ஜவுளி வியாபாரி கைது
முதியவர் கழுத்தை அறுத்த மேற்கு வங்க வாலிபர்ஈரோட்டில் அடித்து கொலை; ஜவுளி வியாபாரி கைது
முதியவர் கழுத்தை அறுத்த மேற்கு வங்க வாலிபர்ஈரோட்டில் அடித்து கொலை; ஜவுளி வியாபாரி கைது
ADDED : ஏப் 19, 2025 01:53 AM
ஈரோடு:ஈரோட்டில், முதியவரை பிளேடால் கழுத்தை அறுத்துவிட்டு, தப்பிய மேற்கு வங்க வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில், ஜவுளி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி, 70. தனியார் பஸ் கண்டக்டராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் மனைவி ஜெயலட்சுமியுடன் வசிக்கிறார். இவரது மகன்கள் திருமணமாகி, அருகே வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம், சுப்பிரமணி வீட்டுக்குள், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் நுழைந்தார். பின், சுப்பிரமணியின் கழுத்தை பிளேடால் அந்த வாலிபர் அறுத்தார். அவரது மனைவி ஜெயலட்சுமி கூச்சலிட்டதும், பக்கத்து வீட்டினர் ஓடி வந்ததும், அந்த வாலிபர் தப்பி ஓடினார்.
கழுத்து அறுபட்ட நிலையில், சுப்பிரமணி மீட்கப்பட்டு, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், இவரது மகன் ஜவுளி வியாபாரியான மணிகண்டபூபதி, 47, சம்பவ இடத்துக்கு வந்து, அப்பகுதியினர் உதவியுடன், வடமாநில நபரை பிடித்து அடித்ததுடன், சூரம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். அந்த வாலிபரை, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். போலீஸ் விசாரணையில், இறந்த வாலிபர், மேற்கு வங்கத்தை சேர்ந்த சோமஓரான் மகன் ராபி ஓரான், 28, என தெரியவந்தது.
இவர் பிச்சை எடுத்து பிழைத்து வந்ததாகவும், மனநிலை சரி இல்லாமல் திரிந்தவர் என்றும் அப்பகுதியினர் கூறி வருகின்றனர். இதற்கிடையில், சுப்பிரமணி கொடுத்த புகார்படி ராபி ஓரான் மீது, சூரம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் ராபி ஓரான் இறந்ததால், போலீசார் விசாரித்து சுப்பிரமணியின் மகன் மணிகண்டபூபதி உட்பட சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, மணிகண்டபூபதியை கைது செய்தனர். மேலும் சில நபர்களை தேடி வருகின்றனர்.

