/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'மாமூல்' தராமல் போனால் எப்படி? கரும்பு லாரி கண்ணாடி 'டமால்'
/
'மாமூல்' தராமல் போனால் எப்படி? கரும்பு லாரி கண்ணாடி 'டமால்'
'மாமூல்' தராமல் போனால் எப்படி? கரும்பு லாரி கண்ணாடி 'டமால்'
'மாமூல்' தராமல் போனால் எப்படி? கரும்பு லாரி கண்ணாடி 'டமால்'
ADDED : ஆக 23, 2025 01:38 AM
சத்தியமங்கலம், தாளவாடி மலையில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு, ஆசனுார்-திம்பம் மலைப்பாதை வழியாக, தினந்தோறும் ஏராளமான லாரிகள் செல்வது வழக்கம். இந்த லாரிகளை வழிமறித்து, யானைகள் கரும்பை ருசிப்பதும் தொடர்கதையாகி விட்டது.
இந்த வகையில் கரும்பு ஏற்றிய ஒரு லாரி ஆசனுார் வழியாக நேற்று முன்தினம் மாலை வந்தது. அப்போது லாரியை வழிமறித்த ஒற்றை யானை, முன்பக்க கண்ணாடியை உடைத்தது.
இதனால் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு உள்ளே பதுங்கி கொள்ள, சாவகாசமாக சென்று கரும்பை தும்பிக்கையால் உருவி பசி தீர சாப்பிட்டது. யானை நகர்ந்த பிறகே, லாரியும் செல்ல முடிந்தது. இதை நேரில் பார்த்த பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.