/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிரந்தர செயல் அலுவலர் நியமனம் எப்போது?
/
நிரந்தர செயல் அலுவலர் நியமனம் எப்போது?
ADDED : மார் 09, 2024 01:19 AM
அந்தியூர் அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணிபுரிந்த செல்வக்குமார், 2023 ஆக.,24ம் தேதி இடமாறுதலில் மதுரைக்கு சென்றார்.
இதனால் காலியான இடத்துக்கு, புது செயல் அலுவலர் நியமிக்கப்படாமல், அத்தாணி பேரூராட்சி
செயல் அலுவலர் நாகேஷுக்கு, கூடுதல் பொறுப்பாக மாவட்ட
நிர்வாகம் ஒப்படைத்தது. சில மாதங்கள் பணிபுரிந்த அவர், பணிச்சுமை காரணமாக, சேலம் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்று சென்று விட்டார். மீண்டும் செயல் அலுவலரின் இருக்கை
காலியானது.
இதனால் ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் வசம், கூடுதல் பொறுப்பாக நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை நாளைக்கு, இப்படி கூடுதல் பொறுப்பு செயல் அலுவலரே நியமிக்கப்படுவர்? என்று, மக்கள் மத்தியில் ஆதங்கம் எழுந்துள்ளது.
நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கப்படாததால், பேரூராட்சி நிர்வாக செயல்பாடு முடங்கியுள்ளது. எனவே நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க, மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.