ADDED : செப் 21, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை :சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்குவது குறித்து மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், தொழிற் சங்க கூட்டு குழுவினரிடையே ஒப்பந்தம் செய்யப்படும். இதன்படி கடந்த, 2022ல் செய்த ஒப்பந்தம் முடிந்துள்ளது. அடுத்த மூன்றாண்டுக்கான போனஸ் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்று, விசைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஏனெனில் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது.
இதுவரை தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுக்காததால், விசைத்தறி தொழிலாளர்கள் வருத்தத்தில் உள்ளனர். இடையில் நவராத்திரி விழா வருவதால் விரைவில் கோரிக்கை மனு கொடுத்து, போனஸ் பேச்சு வார்த்தை தொடங்க, விசைத்தறி தொழிலாளர்கள்
எதிர்பார்க்கின்றனர்.