UPDATED : மே 04, 2026 05:55 AM
ADDED : மே 04, 2026 03:35 AM

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 16 லட்சம் வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு, ஓட்டு எண்ணிக்கை மூலம் இன்று தெரிய வரும். மாவட்டத்தின் எட்டு எம்.எல்.ஏ.,க்கள் யார் என்பது, இன்று மாலை தெரிந்து விடும். இதனால் வேட்பாளர்கள் மட்டுமின்றி, மக்களும் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம், 23ல் நடந்தது. எட்டு சட்டசபை தொகுதிகளில், 17,59,157 வாக்காளர்களில், 15,84,557 பேர் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டளித்தனர். இதில்லாமல், 21,556 பேர் தபால் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் இரு இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஆறு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியிலும், இரு தொகுதிகளுக்கு கோபி அரசு கலை கல்லுாரியிலும்நடக்கிறது.
![]() |

