தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கோடை கனமழை: சென்னிமலையில் 25 ஆண்டு சாதனை முறியடிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கோடை கனமழை: சென்னிமலையில் 25 ஆண்டு சாதனை முறியடிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கோடை கனமழை: சென்னிமலையில் 25 ஆண்டு சாதனை முறியடிப்பு


ADDED : பிப் 26, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அரங்-கேறிய வானிலை மாற்றம், மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது காலை, 6:௦௦ மணி அளவில் லேசான துாரலுடன் தொடங்கிய பொழுது, பகல் முழுவதும் கோடை வெயில் தனது விஸ்வரூபத்தை காட்டியது. வெயில் தாக்கத்தால் மக்கள் அவதிப்-பட்ட நிலையில், இரவு, 8:௦௦ மணியளவில் திடீரென வானம் மேகமூட்டமானது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்றுடன், பயங்கர இடி -மின்னல் முழங்க பெருமழை கொட்டத் தொடங்கி-யது. முதலில் துாரலாக ஆரம்பித்த மழை, நேரம் செல்லச்செல்ல தீவிரமடைந்து, வெகுநேரம் கொட்டி தீர்த்தது.

இதுகுறித்து சென்னிமலையை சேர்ந்த பெரியவர்கள் கூறு-கையில், 'கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாசி மாதத்தில் இது போன்ற கனமழையை நாங்கள் பார்த்ததில்லை' என்று நெகிழ்ச்சி தெரிவித்தனர். இரவு முழுவதும் நீடித்த மழையால், இரவில் இதமான சூழல் நில்வி-யது. மொத்தத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே பெய்த மழை, சென்னிமலை மக்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.

* அந்தியூர் நேற்று மாலை, 5:௦௦ மணி முதல் ஒரு மணி நேரம் விட்டு விட்டு, அந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணாமடுவு, பொய்யேரிக்கரை, ஜி.எஸ்.குடியிருப்பு, மூலக்கடை உள்ளிட்ட இடங்களில் துாறல் மழை பெய்தது.

* ஈரோட்டில் நேற்று மாலை முதல் மேகமூட்டமாக காணப்பட்-டது. இரவு, 7:20 மணிக்கு சுண்ணாம்பு ஓடை உள்ளிட்ட ஈரோட்டின் வெளிப்புறங்களில், 20 நிமிடங்கள் வரை மழை பெய்-தது. அப்போது ஈரோட்டில் பலத்த காற்று, லேசான மின்னல், இடி தென்பட்டது. ஈரோடு மாநகர பகுதியில், 7:45 மணி முதல், 25 நிமிடங்கள் பலத்த மின்னல், இடியுடன் மழை பெய்தது. பல நாட்களுக்கு பின் ஈரோட்டில் மழை பெய்தது. மழை நின்ற பிறகு குளிர் காற்று வீசியது.

11.6 மி.மீ., மழை பதிவு

பவானிசாகர் மற்றும் புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகு-திகளில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் விட்டு விட்டு மித-மான மழை பெய்தது. நேற்று காலை வரை மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகரில், 11.6 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us