ADDED : அக் 21, 2025 01:47 AM
அந்தியூர், அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல் மதியம், 2:00 மணி வரை சாதாரண வெயில் இருந்தது. அதன்பின் வானம் மேகமூட்டமாகி ஒரு சில இடங்களில் லேசான துாறல் பெய்தது. மாலை, 6:00 மணிக்கு பிறகு, அந்தியூர், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான புதுமாரியம்மன் கோவில், ஊஞ்சக்காடு, புதுக்காடு, கூச்சிக்கல்லுார், காட்டூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், மாத்துார், மணல்காடு, ரெட்டிபாளையம், எண்ணமங்கலம், வட்டக்காடு, வரட்டுப்பள்ளம் செக் போஸ்ட், சென்னம்பட்டி, சனிசந்தை சுற்று வட்டார பகுதியில் இரவு, 7:00 மணி முதல் 8:30 மணி வரை விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.
பர்கூர் மலைதியில் தாமரைக்கரை, தேவர்மலை, தட்டகரை, தாளகரை, மணியாச்சி, கொங்காடை, மடம் சுற்று வட்டாரத்தில், மாலை, 6:00 மணிக்கு தொடங்கிய மழை, இரவு, ௮:௦௦ மணியை கடந்து கொட்டி தீர்த்தது. இதனால் இரவில் பட்டாசு வெடிக்க தொடங்கிய மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.