ADDED : அக் 26, 2026 05:40 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை விவசாயிகளை மகிழ்விக்கும்
விதமாக பெய்கிறது. கோபியில் அதிகபட்சமாக, 96.60 மி.மீ., மழை
பெய்தது.
ஈரோட்டில்-10.60, மொடக்குறிச்சி-84, கொடுமுடி-71.20,
பெருந்துறை-60, சென்னிமலை-34.20, பவானி-30.60, கவுந்தப்பாடி-14.80,
அம்மாபேட்டை-43.20, வரட்டுபள்ளம்-28, எலந்தகுட்டை மேடு-23.20,
கொடிவேரி அணை-73.40, குண்டேரிபள்ளம் அணை-65.20, நம்பியூர்-43,
சத்தி-72, பவானி சாகர் அணை-35.20, தாளவாடி-15.10 மி.மீ., மழை பெய்தது.
பெருந்துறையில்
குடிசை வீடு, கோபியில் கான்கிரீட் வீடு ஒன்றும் மழைக்கு சேதம்
அடைந்தது. மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, கொடிவேரி,
குண்டேரிபள்ளம், சத்தியில் கன மழை பெய்துள்ளது. கொடுமுடியில்
பெய்த கன மழையால், டவுன் பகுதிக்கு செல்லும் ரயில்வே நுழைவு பாலத்தில்
தண்ணீர் தேங்கியது. வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. நேற்று காலை
பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள், பம்ப் மூலம் நீரை உறிஞ்சி
வெளியேற்றினர். நேற்று மதியத்துக்கு பின்னரே கொடுமுடி ரயில்வே
நுழைவு பாலம் வழியே செல்ல முடிந்தது.
