ADDED : மே 17, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் காலிங்கராயன் வீதியை சேர்ந்தவர் சையது முஸ்தபா, 34; இவரின் மனைவி சுபாஷினி, 33; தம்பதிக்கு இரண்டரை வயதில் மகள் உள்ளார். கணவன்---மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் குழந்தையுடன் சுபாஷினி வீட்டை விட்டு மாயமாகி விட்டார். புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார், தேடி வருகின்றனர்.* பவானி, பழனிபுரம் பகுதியை சேர்ந்தவர் கலாமணி, 53; அதிரசம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.
