ADDED : மே 15, 2026 06:10 AM
கோபி::கோபி அருகே பிச்சாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 40, டிரைவர்; இவரின் மனைவி அமுதா, 38; தம்பதிக்கு, 18 வயதில் மகன், எட்டு வயதில் மகள் உள்ளனர். கழுத்தில் வெட்டு காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் தங்கராஜ் நேற்று முன்தினம் கொலையுண்டு கிடந்தார். கோபி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி அமுதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். நேற்று அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தங்கராஜ்-அமுதா காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். மது குடித்துவிட்டு அமுதாகவை அடித்து துன்புறுத்தியுள்ளார். மகன், மகள் மற்றும் தனது தாயாரையும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த அமுதா, நேற்று முன்தினம் கழுத்தில் வெட்டி, ஆணுறுப்பை அறுத்து கொலை செய்துள்ளார். இதை அமுதா ஒப்புக்கொண்டதால், கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு கூறினர்.
