ADDED : ஆக 09, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே சித்தகவுண்டனுாரை சேர்ந்தவர் பிரபு, 40; இவரது மனைவி சித்தாயி, 39; கூலித் தொழிலாளி. கடந்த, 10 நாட்களுக்கு முன்பு சித்தாயி ரேஷன் கடைக்கு செல்வதாக கூறி சென்றார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர் வீடுகளில் கணவர் பிரபு விசாரித்தார். தேடி பார்த்ததில் எந்த பயனும் இல்லாததால், வெள்ளித்திருப்பூர் போலீசில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு பிரபு புகார் அளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் காணாமல் போன சித்தாயியை தேடி வருகின்றனர்.

