ADDED : மார் 13, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை: சென்னிமலை யூனியன் ஓட்டப்பாறை ஊராட்சி, மேலப்பா-ளையம், புது விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்த், 45; விசைத்தறி தொழிலாளி. இவருக்கு தனலட்சுமி, 40, கங்கா லட்சுமி, 38, என்று இரு மனைவிகள் உள்ளனர். இரு மனைவிய-ருடன் ஒரே வீட்டில் வசிக்கிறார்.
கடந்த, 7ம் தேதி இரவு, இரு மனைவியருக்கும் தகராறு ஏற்பட்-டுள்ளது. ஆனந்த் சமாதானப்படுத்திய நிலையில், தனலட்சுமி அன்றிரவே வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். ஆனந்த் புகா-ரின்படி சென்னிமலை போலீசார் தனலட்சுமியை தேடி வருகின்-றனர்.
