ADDED : மே 29, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகர் முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. சேலம் எருமாபாளையத்தில் பீரோ கம்பெனியில் பணியாற்றி வருகிறார்
. இவர் மனைவி தேவி, 26; முதல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்ற நிலையில், கார்த்தியை திருமணம் செய்தார். வீட்டின் அருகே கார்மெண்ட்சில் பணியாற்றினார். கடந்த, 23ம் தேதி காலை வேலைக்கு சென்ற தேவி, மாலையில் வீடு திரும்பவில்லை. கார்த்தி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
