தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி, ஊர்க்கார வாலிபர் மாயம்: தொழிலாளி புகார்

மனைவி, ஊர்க்கார வாலிபர் மாயம்: தொழிலாளி புகார்

மனைவி, ஊர்க்கார வாலிபர் மாயம்: தொழிலாளி புகார்


ADDED : மார் 05, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:வீட்டில் தங்கியிருந்த ஊர்க்கார வாலிபருடன், மனைவியையும் காணவில்லை என்று, கூலி தொழிலாளி போலீசில் புகார் செய்துள்ளார்.

ஈரோடு, முள்ளாம்பரப்பு, கிளியம்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ராஜா கண்ணன், 45; கூலி தொழிலாளி. இவரின் மனைவி சாந்தி, 44; இவர்கள் சொந்த ஊர் கரூர் மாவட்டம் கிழக்கு அய்யம்பாளையம், கடவூர். தம்பதிக்கு இரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்கின்றனர். மகள் திருமணமாகி தனியாக வசிக்கிறார். ராஜா கண்ணன் ஊரை சேர்ந்த சரவணன், ஏழு மாதமாக ராஜா கண்ணனுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 23ம் தேதி சாந்தியும், அவரை தொடர்ந்து சரவணனும் அடுத்தடுத்து மாயமாகி விட்டனர். இந்நிலையில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு, ஈரோடு தாலுகா போலீசில், ராஜா கண்ணன் புகார் செய்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us