ADDED : அக் 19, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பூபதி ராஜா, 34; தனியார் நிறுவன ஊழியர்.
இவரின் மனைவி திவ்யா, 34; பவானியில் தனியார் கல்வி நிறுவன ஊழியர். தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு திவ்யா வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு நண்பருடன் லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்புக்கு சென்றார். அவரது நண்பரிடம் சேலம் செல்வதாக கூறியுள்ளார். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. பூபதிராஜா புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.