ADDED : மார் 19, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் சகாயமேரி, 21. சில ஆண்டுகளுக்கு முன்பு புங்கார் காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி, அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று, இரண்டு வயதில் குழந்-தைகள்
உள்ளனர்.
சமீப காலமாக சகாயமேரி மொபைல்போனில் அடிக்கடி பேசி கொண்டிருந்ததால், கணவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சகாயமேரி கடந்த, 15ல் வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பவானிசாகர் போலீசில் பிரகாஷ் நேற்று புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சகாயமேரியை தேடி வருகின்றனர்.
