ADDED : ஏப் 29, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
பவானி:ஆப்பக்கூடல் அருகே குச்சலுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 34; கூலி தொழிலாளி. இவரின் மனைவி தீபா, 30; தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பவானி அருகே பெருமாள்மலையில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்துக்கு, தீபா வேலைக்கு சென்று வந்தார்.
இரு தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. விஜயகுமார் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.
