ADDED : ஆக 10, 2026 05:40 AM
ஈரோடு:ஈரோடு
சூரம்பட்டி அண்ணா வீதி சுப்பிரமணி மனைவி கவுரி, 46; சுப்பிரமணி
தினமும் மதுகுடித்து விட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருந்தார்.
இதனால் கவுரி மன வேதனையில் இருந்துள்ளார். கடந்த, 7ம் தேதி மாலை வீட்டில்
கவுரி துாக்கிட்டு கொண்டார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்ட
மகள்கள், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ
பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. கவுரியின் மகள்
தர்ஷினி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
*
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் அப்துல்லா ரசாக், 60;
பெயிண்டர். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். கடந்த, 7ல் மது போதையில்
வீட்டுக்கு சென்றவர், வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி மும்தாஜ் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
