ADDED : ஆக 03, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தில் தனியார் கல்லுாரி வளாகத்தில், செப்டிக் டேங்க் அமைக்க, 6 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரை தேடவந்த ஒரு காட்டுப்பன்றி குழிக்குள் விழுந்து விட்டது. இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறை, கோபி தீயணைப்பு நிலையத்துக்கு, நேற்று காலை தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள், வலை கயிறு மூலம் பன்றியை மீட்டு, வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.