/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்சாரம் பாய்ந்து காட்டு யானை சாவு
/
மின்சாரம் பாய்ந்து காட்டு யானை சாவு
ADDED : அக் 17, 2024 02:43 AM

டி.என்.பாளையம்,:ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வன பகுதி புலிகள் காப்பகம் என்பதால் ஏராளமான யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. வன பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
பங்களாபுதுார் வனப்பகுதி அருகே தனியார் பொறியியல் கல்லுாரிக்கு சொந்தமான கல் குவாரி அருகில் விவசாய நிலம் உள்ளது. அந்த பகுதியில் மின்வேலி அமைத்துள்ளனர். இந்த மின்வேலி அருகிலேயே உயர் அழுத்த மின் கம்பமும் உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த காட்டு யானை ஒன்று, மின்வேலியை உடைத்த போது மின்சாரம் பாய்ந்து இறந்தது.
டி.என்.பாளையம் வனத்துறையினர் யானை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்து, அதே வனத்தில் யானையை அடக்கம் செய்தனர்.
மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததா அல்லது மரக்கிளையை உடைத்த போது உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்ததா என்பதுகுறித்து, ஆய்வின் முடிவில் தெரியவரும் என, வனத்துறையினர்தெரிவித்தனர்.

