தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'தொழில் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்'

'தொழில் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்'

'தொழில் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்'


ADDED : நவ 11, 2024 07:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2024 07:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். குறிப்பாக பெருந்துறையில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். அவர்களில் சொந்த ஊருக்கு சென்ற பெரும்பாலானோர் ஈரோடு திரும்பவில்லை.

இதற்கான காரணம், மத்திய அரசின் சிறப்பு திட்டங்களால், பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட என அந்தந்த மாநிலங்களிலேயே தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழிலாளர், தங்களின் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க வேண்டும்.

வடமாநில தொழிலாளர்களுக்கு சாதகமான சலுகைகளை தமிழக அரசு வழங்கினால், அவர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்புகள் அதிகம். அத்துடன் தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு சாதகமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us