தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நுால் விலை உயர்வு சிக்கல் தீருமா?

நுால் விலை உயர்வு சிக்கல் தீருமா?

நுால் விலை உயர்வு சிக்கல் தீருமா?


ADDED : மே 26, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:மத்திய அரசின் உரிய நடவடிக்கையை எதிர்நோக்கி திருப்பூர் காத்திருக்கும் நிலையில், நுால் விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்தகட்ட நகர்வுக்கு உற்பத்தியாளர்கள் கூட்டுக்குழு தயாராகி வருகிறது.

நம் நாட்டின் பின்னலாடைத் தலைநகரான திருப்பூர், தற்போது நுால் விலை உயர்வு எனும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பஞ்சு வரத்து சீராக இருந்தபோதும், சர்வதேச சந்தையைக் கணக்கிட்டு இந்தியப் பருத்திக்கழகம் விலையை உயர்த்தியது, ஒட்டு

மொத்த ஜவுளித்துறையிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.விலை சீராக இருந்த சமயம் பார்த்து, பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் வர்த்தகர்களும் பஞ்சை வாங்கி இருப்பு வைத்துள்ள நிலையில், தற்போது செயற்கையான தட்டுப்பாடு உருவாகியுள்ளது. ஒரு கேண்டி(356 கிலோ) பஞ்சு விற்பனையில் 15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கும் வர்த்தகர்களின் இந்த யுத்தி, திருப்பூரின் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் கேள்விக்குறியாக்கியுள்ளது. பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் எனத் தொழில்துறையினர் டெல்லி வரை சென்று முறையிட்டும், மத்திய அரசிடமிருந்து இதுவரை ஆக்கப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வராதது பின்னலாடை உற்பத்தியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us