/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'எங்களை விரட்டலாமா?' நரிக்குறவர்கள் குமுறல்
/
'எங்களை விரட்டலாமா?' நரிக்குறவர்கள் குமுறல்
ADDED : ஜன 23, 2026 04:49 AM
தாராபுரம்: தாராபுரம் பஸ் ஸ்டாண்டில், நடைபாதையோரம் நரிக்குறவர்கள் ஊசி, பாசிமணிகளை விற்பனை செய்வது வழக்கம். ஆனால் நக-ராட்சி வணிக வளாகத்தில் கடை வைத்திருப்பவர்கள், வேறிடத்-துக்கு சென்று பொருட்களை விற்குமாறு திட்டி வந்துள்ளனர்.
நேற்று காலை நரிக்குறவர்களின் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை, ஒரு
கடைக்காரர் துாக்கி எறிந்து கடும் வார்த்தை-களை பிரயோகித்துள்ளார். இதனால் நரிக்குறவர்கள் போராட்-டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், 20க்கும் மேற்பட்ட நரிக்குற-வர்கள், ஸ்டேஷனுக்கு சென்று புகாரளித்தனர். ஸ்டேஷனில் இருந்த ஒரு கான்ஸ்டபிள், நகராட்சி அலுவலகத்துக்கு சென்று முறையிடுங்கள் என கூறியுள்ளார்.பஸ் ஸ்டாண்டில், 40 ஆண்டுகளாக நாங்கள் வியாபாரம் செய்-கிறோம். இந்நிலையில் எங்களை விரட்டினால் நாங்கள் என்ன செய்வது? நியாயம் கேட்டு வந்தால், போலீசாரும் விரட்டினால் எப்படி? என்று குமுறியபடி அங்கிருந்து
சென்றனர்.

