/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விளையாட்டுகளில் வெற்றி; மாணவர்களுக்கு சான்றிதழ்
/
விளையாட்டுகளில் வெற்றி; மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : ஆக 23, 2024 04:33 AM
புன்செய் புளியம்பட்டி: பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நம்பியூர் வட்டார அளவிலான குறுமையத்துக்கு உட்-பட்ட, 25 பள்ளிகளில் படிக்கும், 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான போட்டி பனையம்பள்ளி அரசு மேல்-நிலைப் பள்ளியில் நடந்தது.
கபடி, கைப்பந்து, ஹேண்ட்பால், பூப்பந்து, கால்பந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகளில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாண-வியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கால்பந்து ஜூனியர் பிரிவு இறுதி போட்டியில், பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், மாணவியர் அணி வெற்றி பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையை, பனையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் தலை-மையில், பி.டி.ஏ., தலைவர் ஆறுமுகம் வழங்கினார்.