தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்

தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்

தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்


ADDED : மே 08, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:கடந்த மார்ச், 15ல் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று மாலையுடன், நடத்தை விதிமுறைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

இதை தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களில் மறைக்கப்பட்ட தலைவர்களின் படங்கள், அவர்களது பெயர் எழுதப்பட்ட கட்டடங்கள், கல்வெட்டு, பெயர் பலகைகள் மீண்டும் திறக்கப்பட்டன. பாலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்களின் பெயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் அறைகள் திறந்து, அங்கும் பெயர் பலகைகள் மாட்டப்பட்டன.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டி அகற்றப்பட்டு, இன்று முதல் மனுக்கள் பெறும் நடைமுறை தொடர்கிறது.வரும் திங்கள் முதல் மக்கள் குறைதீர் கூட்டம் உட்பட பிற கூட்டங்கள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us