ADDED : ஜூலை 05, 2026 05:44 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி, டானாபுதுார் போலீஸ் சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்
தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது
மொபட்டில் பெண் உள்ளிட்ட இருவர் வந்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது
வாகனத்தில், 1,250 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் சொலவனுார்
மேடு மருதாள், 55, ராஜா, 38, என்பதும், விற்பனைக்காக கொண்டு
சென்றதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், சத்தி
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான மருதாள் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள், புளியம்பட்டி ஸ்டேஷனில்
பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
*
சத்தியமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை புளியங்கோம்பை
பகுதியில் ரோந்து சென்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை
ரங்கம்மாளை, 70, கைது செய்து, 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
