ADDED : மே 20, 2026 05:49 AM
பவானி: சென்னம்பட்டியை அடுத்த இலிப்பிலியை சேர்ந்த்வர் விக்டோரியா, 23; இவரின் கணவர் பிரகாஷ். கடந்த, 2022ல் திருமணம் நடந்தது. விக்டோரியா வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கு பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்கு முன் அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் பிரகாஷ், மாமியார் வீட்டுக்கு நேற்று காலை சென்றுள்ளார். இதனால் விக்டோரியா வீட்டுக்குள் சென்று, கதவை தாழிட்டு கொண்டார். வெகு நேரம் தட்டியும் திறக்காத நிலையில் மாமியார் சுமதி வந்துள்ளார்.
சந்தேகமடைந்த இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, துப்பட்டாவில் துாக்கிட்ட நிலையில் விக்டோரியா தொங்கி கொண்டிருந்தார். அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரிய வந்தது. அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
