/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வார சீட்டு நடத்தி மோசடி எஸ்.பி.,யிடம் பெண் புகார்
/
வார சீட்டு நடத்தி மோசடி எஸ்.பி.,யிடம் பெண் புகார்
ADDED : அக் 16, 2025 01:34 AM
ஈரோடு, ஈரோடு லக்காபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம், புதுவலசை சேர்ந்தவர் துளசிமணி, 42. இவர் ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சின்னியம்பாளையத்தை சேர்ந்த காந்தி என்பவரிடம், கடந்தாண்டு தீபாவளி வார சீட்டு சேர்ந்தேன். ரூ.100, 200, 500 என பல்வேறு வகை சீட்டுகளை சேர்த்தார்.
இதில் லக்காபுரம், 46 புதுார், சின்னியம்பாளையம், முத்துகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலர் வார சீட்டில் சேர்ந்துள்ளனர். சீட்டில் பணம் கூடுதலாக கிடைக்கும் என்பதால் சேர்ந்தோம். சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை வார சீட்டில் செலுத்தினோம். பணம் செலுத்தியதற்கான ஆதாரம் உள்ளது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் காந்தியின் மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அவரது வீட்டுக்கு சென்று பார்த்தோம். வீடு பூட்டி இருந்தது. விசாரித்த போது அவர் வீட்டை காலி செய்து சென்றது தெரியவந்தது. எங்களை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. எனவே, காந்தி மீது சட்டரீதியான
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.