ADDED : ஏப் 29, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
சிவகிரி:சிவகிரி அம்மன்கோவில் சிலோன் காலனி புஷ்பராஜ் மனைவி புவனேஸ்வரி, 52; அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். வயிற்றில் கட்டி இருப்பது தெரிந்தது. ஆப்பரேஷன் செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தினர். புஷ்பராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.கடந்த, 27ம் தேதி மாலை மகன் ராமச்சந்திரன், மகள் திவ்யாவுக்கு போன் செய்து போசிவிட்டு, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் சென்று, தாயை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
