ADDED : மே 29, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
சிவகிரி, சிவகிரி, பாரதி வீதியை சேர்ந்த வாசு மனைவி தேவி, 62; இவர் சொந்த ஊர் சேலம் வி.டி.சி., லைன்மேடு தெற்கு வீதி திருச்சி ரோட்டை சேர்ந்தவர். நேற்று காலை வீட்டுக்கு வெளியே தேவி நின்றிருந்தார்.
அப்போது இடது காலில் பாம்பு கடித்து விட்டது. சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
