ADDED : மார் 11, 2024 02:02 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மற்றும் காவிரி ரயில்வே ஸ்டேஷன் இடையே, தண்டவாள பகுதியில், ஒரு பெண்
ரயில் மோதி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
ரயில்வே
போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் ஈரோடு, வி.வி.சி.ஆர் நகரை
சேர்ந்த சின்னத்தம்பி மனைவி கோவிந்தம்மாள், 61, என தெரிந்தது.
தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது, ரயில் மோதி பலியானதாக,
போலீசார் தெரிவித்தனர்.
