/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக் மீது பைக் மோதல் பெண் நெசவாளி சாவு
/
பைக் மீது பைக் மோதல் பெண் நெசவாளி சாவு
ADDED : நவ 04, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை யூனியன் அசோகபுரம், வெள்ளோடு ரோடு பகுதியை சேர்ந்த குமாரசாமி மனைவி சரோஜா, 46; கைத்தறி சங்க உறுப்பினராக இருந்து நெசவு நெய்து வந்தார். அசோகபுரம் பகுதியில் ேஹாண்டா ஏக்டிவா -பைக்கில், உறவுக்கார வாலிபர் ஞானசேகருடன், நேற்று முன்தினம் மாலை சென்றார்.
அப்போது அதிவேகத்தில் வந்த ராயல் என்பீல்டு பைக் மோதியதில், சாலையில் விழுந்த சரோஜாவுக்கு தலையில் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நேற்று காலை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

