/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முறையாக குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
/
முறையாக குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
ADDED : நவ 15, 2025 03:09 AM
பவானிசாகர்: பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்., தொப்பம்பா-ளையத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்-றனர். இவர்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினி-யோகம் செய்யப்படுகிறது.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, புன்செய்புளியம்-பட்டி-பவானிசாகர் சாலையில், பெண்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண்கள் கூறியதாவது:
தொடக்கத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்-தது, பின் நான்கு நாட்கள், ஒரு வாரம் என தற்போது, 15 நாட்க-ளுக்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது. அதுவும் பாதி வீதிக-ளுக்கு மட்டும் கிடைக்கிறது. மீதி வீதிகளுக்கு வருவதில்லை.
குடிநீர் வாரியத்தில் கேட்டால் இவ்வளவுதான் தண்ணீர் வழங்க முடியும் என கூறுகின்றனர். போர்வெல் தண்ணீரும் வினியோகிப்-பதில்லை.
இவ்வாறு கூறினர்.
யூனியன் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறவே, மறியலை கைவிட்டு கலைந்து சென்-றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

