தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 வழங்கப்படும்'

'மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 வழங்கப்படும்'

'மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 வழங்கப்படும்'


ADDED : ஏப் 19, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி, சென்னிமலை ஒன்றிய பகுதியான புதுவலசு, தாசநாயக்கன்பாளையம், கவுண்டச்சிபாளையம், தலையக்காட்டூர், புங்கம்பாடி, கோக்காட்டு வலசு, கொளத்துப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அவரை ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர். அப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அரசு நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், மாநில அளவில் மகளிர் உரிமைத்தொகை, 1,000 ரூபாய், 1.31 கோடி குடும்ப தலைவிக்கு வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மீண்டும் தி.மு.க., ஆட்சி தொடரும்போது, மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். விடுபட்டவர்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்படும். 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். இதனால் மகளிருக்கு தேவையான மின் சாதனத்தை வாங்கி கொள்ளலாம். புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தொகை, 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

முதல்வர் அறிவித்த திட்டம் மட்டுமின்றி, மேலும் பல திட்ட பலன்கள் கிடைக்க அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட வேண்டும். இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us