/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் காளைக்கு சிலை அமைக்கும் பணி துவக்கம்
/
காங்கேயம் காளைக்கு சிலை அமைக்கும் பணி துவக்கம்
ADDED : நவ 25, 2025 01:46 AM
காங்கேயம், :காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், காங்கேயம் காளை சிலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று மதியம் நடந்தது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். காளை சிலை, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், ௧1 அடி உயரம், 12 அடி நீளம், 3.25 அடி அகலத்தில் வெண்கலத்தில் அமைக்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் காளை சிலை அமைப்பு சங்க தலைவர் கார்த்திகேயன், நகர செயலாளர்கள் சேமலையப்பன், முருகானந்தன், ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், நகர்மன்ற தலைவர் சூர்யபிரகாஷ், சிலை அமைப்பு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முத்துாரில் 46 பேருக்கு பட்டா
திருப்பூர் மாவட்டம் முத்துார் பேரூராட்சி, நல்லிக்கவுண்டன்புதுாரில் நீர்வளத்துறை சார்பில், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தில், 95 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
முத்துாரில், 46 பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இதில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்தலைவர் இல.பத்மநபான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

