ADDED : மார் 27, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்ட தேர்தல் பணிகள் குறித்து, 'நோடல் ஆபீசர்' எனப்படும் பொறுப்பு அதிகாரிகளின் கடமைகள், பொறுப்பு ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.
இதில் அனைத்து நோடல் ஆபீசர், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பங்கேற்றனர்.தொகுதி அளவிலும், மண்டல, ஓட்டுச்சாவடி அளவில் உள்ள அனைத்து அலுவலர்கள், பணியாளர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒதுக்-கப்பட்ட ஓட்டுச்சாவடிகளின் தேவைகள், அலுவலர்களின் பணிகள், இயந்திரம் உள்ளிட்டவைகளை உறுதி செய்தல் என அனைத்தையும் கண்காணித்து, உரிய அலுவலருக்கு தெரிவிக்க யோசனை தெரிவிக்கப்பட்டது.
