தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 4,758 வெப் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

4,758 வெப் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

4,758 வெப் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்


ADDED : ஏப் 19, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதிகளில், 2,379 ஓட்டுச்சாவடிகளில், 4,758 வெப் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகளை ஈரோடு கொல்லம்பாளையம் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கேமரா சுமைக்கும் பணியை ஆய்வு செய்த கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: சட்டசபை தேர்தலில் எட்டு தொகுதிகளில், 17.59 லட்சம் வாக்காளர் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர். இவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய வசதியாக, 2,379 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க ஓட்டுச்சாவடியின் உட்புறம், வெளிப்புறம் என, 2 இரு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

இவ்வாறாக, 4,758 வெப் கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாளில் நிறைவு பெறும். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்தபடி, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியையும் கண்காணிக்கலாம். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us