/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணி; விண்ணப்பம் வரவேற்பு
/
குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணி; விண்ணப்பம் வரவேற்பு
குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணி; விண்ணப்பம் வரவேற்பு
குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணி; விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 06, 2024 01:12 AM
குழந்தைகள் பாதுகாப்பு அலகு
பணி; விண்ணப்பம் வரவேற்பு
ஈரோடு, நவ. 6-
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர், சமூக பணியாளர், புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. கணக்காளர் பணிக்கு, இளங்கலை வணிகவியல், கணிதம் படித்து, ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சமூக பணியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் சமூக பணி, சமூகவியல், சமூக அறிவியல் படித்திருக்க வேண்டும். தொகுப்பூதியமாக, 18,536 ரூபாய் வழங்கப்படும். புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இம்மூன்று பணிக்கும், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், erode.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
புகைப்படம், சான்றுகள் இணைத்து, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, கலெக்டர் அலுவலகம், 6 வது தளம், ஈரோடு-638011' என்ற முகவரிக்கு வரும், 15ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.