ADDED : மார் 19, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், ரயில்வே நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பிளாட்பார்ம்கள், ரயில்வே காலனி, ரயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதியை இணைக்கும் வகையில், நடைமேம்பாலம் கட்டப்-பட்டு வருகிறது. இந்நிலையில், ராட்சத கிரேன் உதவியுடன் கான்-கிரீட் துாண்களில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பணி நேற்று துவங்கியது. இப்பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில் நடைமேம்-பாலம் தயாராகி விடும். பொதுமக்கள், ரயில் பயணிகள் சிரம-மின்றி சென்று வர வழிவகை செய்யப்படும் என ரயில்வே ஊழி-யர்கள் தெரிவித்தனர்.
