தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலுக்காக அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் பணி

பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலுக்காக அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் பணி

பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலுக்காக அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் பணி


ADDED : ஜூன் 28, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 02:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; பெருந்துறை தொகுதியில் வென்ற அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகுமார், தனது பதவியை ராஜி-னாமா செய்து, காலியான தொகுதியாக அறிவிக்-கப்பட்டது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, இடைத்தேர்தலுக்காக, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவ-லக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்-னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில், பெருந்-துறை தொகுதிக்கு தேவையான இயந்திரங்களை பெல் இன்ஜினியர் மூலம் முதற்கட்ட சரிபார்ப்பு பணி கடந்த, 16 ல் துவங்கி, 23ல் முடிந்தது. தற்-போது அடிப்படை பணிகளை தேர்தல் பிரிவு அதி-காரிகள் துவங்கி உள்ளனர்.

இதுபற்றி, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:பெருந்துறை தொகுதியில், 2 லட்சத்து, 14,451 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு, 292 ஓட்டுச்சாவ-டிகள் உள்ளன. இவற்றுக்கு தேவையானவை என, இரு மடங்காக, தலா, 584 மின்னணு ஓட்டுப்-பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியற்றின் செயல்பாடுகள், பேட்டரி உறுதி செய்து, மாதிரி ஓட்டுப்பதிவும் முடிந்துள்-ளது. அந்த இயந்திரங்கள், இடைத்தேர்தல் பயன்-பாட்டுக்காக தனியாக வைக்கப்பட்டுள்ளன..

தொகுதியில் உள்ள, 292 ஓட்டுச்சாவடியிலும், அடிப்படை வசதிகளான பாதுகாப்பு, மின் விளக்கு உள்ளிட்ட மின்சாரம், கழிப்பறை, குடிநீர், சேமி-யானா பந்தல் தேவை, மாற்றுத்திறனாளிகளுக்-கான சாய்வுதள வசதிகள் உறுதி செய்யப்படுகி-றது. இவற்றை, அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், அப்பகுதி வி.ஏ.ஓ.,க்கள் உறுதி செய்-கின்றனர். கடந்த ஏப்., 23ல் நடந்த தேர்தலில் சில பூத்தில் வசதி குறைபாடுகளை சுட்டி காட்டி இருந்தாலும், பிரச்னைகள் உட்பட பதட்டமான ஓட்டுச்சாவடியாக மாறி இருந்தாலும், அவற்-றையும் பட்டியலிட்டுள்ளோம். கடந்த முறை இத்தொகுதியில், 13 பேர் போட்டியிட்டதால், தலா ஒரு இ.வி.எம்.,கள், கட்டுப்பாட்டு இயந்தி-ரங்கள், வி.வி.பேட் பயன்படுத்தப்பட்டது. அடுத்த-டுத்து, தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் பணி-களை இடைத்தேர்தல் முடியும் வரை தொடர்வோம்.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us