/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலி அடித்து கொன்ற தொழிலாளி கைது
/
உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலி அடித்து கொன்ற தொழிலாளி கைது
உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலி அடித்து கொன்ற தொழிலாளி கைது
உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலி அடித்து கொன்ற தொழிலாளி கைது
ADDED : ஆக 20, 2025 03:06 AM
பவானி:உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலியை, கிரைண்டர் குழவிக்கல்லால் அடித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானி, வர்ணபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயா, 38; டெய்லர். தம்பதிக்கு, 16 மற்றும் 11 வயதில் ஒரு மகள், மகன் உள்ளனர்.
வெல்டிங் தொழிலாளியான நாகராஜ், பவானி காவல் நிலைய குடியிருப்பு எதிரில் உள்ள பட்டறையில் வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம், விஜயா வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அருகில் கிரைண்டர் குழவிக்கல், மிளகாய் பொடி பொட்டலம் மற்றும் அரிவாள்மனை கிடந்தது.
பவானி போலீசார் விசாரணையில், விஜயா தன் கணவருடன் பட்டறையில் வேலை செய்யும் பெரியமோளபாளையத்தை சேர்ந்த மோகன், 55, வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது.
அவரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், நாகராஜ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததில், விஜயாவுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதும், ஏழு ஆண்டுகளாக இருவரும் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது.
நேற்று முன்தினம் மதியம், விஜயாவை, மோகன் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அவர் மறுத்த நிலையில், விடாப்பிடியாக பாலியல் தொல்லை தந்துள்ளார். இதனால் சமையல் கரண்டியை எடுத்து, மோகனை, விஜயா அடித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மோகன், கிரைண்டர் குழவிக்கல்லை எடுத்து, விஜயா பின்பக்க தலையில் அடித்துள்ளார். ரத்தம் வழிய விழுந்த விஜயாவின் தலையில் மீண்டும் இரண்டு முறை தாக்கியதில், அவர் இறந்துள்ளார்.
மோகனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மோகனுக்கு, மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.