ADDED : ஜூன் 11, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, பெரியசேமூர், சுக்ரமணியவலசு சக்தி நகரை சேர்ந்தவர் தனபால், 51; சக்தி நகர் ஐய்யர் காட்டில் தறி ஓட்டும் வேலை செய்தார். இவருக்கு வாய் பேச முடியாத, காது கேளாத, 30 வயதில் மகள் உள்ளார். ஆறு மாதமாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.
நேற்று முன்தினம் தனபாலும், மகளும் வேலைக்கு சென்றனர். இந்நிலையில் தறி பட்டறை அலுவலக அறை மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.