ADDED : நவ 29, 2026 06:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சூரம்பட்டி சங்கு நகர் முதல் வீதியை சேர்ந்தவர் அப்துல்லா, 34, மனைவி
மற்றும் ஒரு மகன் உள்ளனர். அப்துல்லா மது குடித்து வந்து, மனைவி மற்றும்
மகனிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த, 26ம் தேதி இரவு நடந்த
தகராறினால், மனைவி மற்றும் மகன் கோபித்து கொண்டு வீட்டின் மேல் அறைக்கு
துாங்க சென்று விட்டனர். மறுநாள் வீட்டின் படுக்கையறையில் வேட்டியால்
துாக்கிட்டு அப்துல்லா தற்கொலை செய்து கொண்டார். சூரம்பட்டி போலீசார்
வழக்கு பதிவு செய்தனர்.
