தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு


ADDED : மார் 12, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கொடுமுடி, தாமரைபாளையம் முத்தையன்வலசை சேர்ந்தவர் கந்தகுமார், 44, விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். கடந்த 9ம் தேதி காலை கம்மங்காட்டு களம் நல்லசிவம் தோட்டத்தில், குச்சிக்கி-ழங்கு காட்டிற்கு மருந்து அடித்து கொண்டிருந்தார்.

அப்போது, இடது கால் பாதத்தை பாம்பு தீண்டியது. உடனே அவரை மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கிசிச்சை பலனின்றி கடந்த, 10ம் தேதி இறந்தார். கொடுமுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us