ADDED : மார் 26, 2026 01:14 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்: அந்தியூர் அருகே ஆத்தப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மாரசாமி, 64; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அந்தியூரில் இருந்து, சைக்கிளில் சென்ற மாரசாமி பேரூராட்சி அலுவலகம் அருகே தடுமாறி விழுந்தார்.
அப்போது, எதிர் திசையில் டி.வி.எஸ். எக்ஸ்.எல்., மொபட்டில் வந்த, அந்தியூர் ஸ்வீப்பர் குடியிருப்பை சேர்ந்த நந்தகுமார், மார-சாமி மீது மோதினார்.தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாரசாமியை ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர். அங்கிருந்து நேற்று அதி-காலை, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
