ADDED : மார் 07, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
கோபி: கோபி
அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 50; கூலி
தொழிலாளி; நேற்று முன்தினம் மாலை காவேரிபாளையம் என்ற இடத்தில்,
கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில்
மூழ்கினார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து
விட்டது தெரிய வந்தது. அவரின் மனைவி நீலவேணி புகாரின்படி, சிறுவலுார்
போலீசார் விசாரிக்கின்றனர்.
