தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

30 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

30 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜன 09, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டை அடுத்த எல்லப்பாளையத்தில் உள்ள ஒரு மில்லில், 20 நாட்களாக பெயிண்டிங் வேலை நடக்கிறது. ஈரோடு வில்லர-சம்பட்டி தொட்டம்பட்டி ராமசாமி மகன் முரளி, 38, கான்ட்ராக்ட் எடுத்து பணி செய்து வருகிறார். நான்கு தொழிலாளர் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை, 30 அடி உயரத்தில் சிமெண்ட் அட்டை மீது நின்றபடி, ஈரோடு எலவமலை மூவேந்தர் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் தமிழ் வாணன், 27, முரளி ஆகியோர் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தனர்.

அப்போது பாரம் தாங்காமல் சிமெண்ட் அட்டை உடைந்ததில், இருவரும் விழுந்தனர். இதில் தமிழ்வாணன் கெமிக்கல் தொட்-டிக்குள் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோ-தனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தமிழ்வாணனுக்கு திருமணம் ஆகவில்லை. இதேபோல் பலத்த காயமடைந்த முரளி, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us