/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
/
தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஏப் 22, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் அருகேயுள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 55; மரம் ஏறும் தொழிலாளி. வளையகாட்டு தோட்டத்தை சேர்ந்த வெங்கிடுசாமி தோட்டத்தில், தென்னை மரம் வெட்டும் பணிக்காக, கணக்கம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பவருடன் நேற்று காலை சென்றார்.
மரத்தின் உச்சி பகுதியை வெட்டும்போது திடீரென மரம் முறிந்து விழுந்தது. இதில் தரையில் விழுந்த தங்கராஜ் படுகாயமடைந்தார். கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.